சூர்யா பிடிவாதம் அமெரிக்க டெக்னீஷியன் வருகை!!!

28th of November 2013
சென்னை::லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய பட ஷூட்டிங் மும்பையில் தொடங்கியது. இதில் ரவுடியாக  நடிக்கிறார் சூர்யா. உலகிலேயே முதன்முறையாக இப்படத்தில் ரெட் டிராகன் என்ற கேமரா பயன்படுத்தப்படுகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். முதன்முறையாக இந்த கேமரா கையாளப்படுவதால் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பயிற்சி தருவதற்காக மும்பைக்கு வருகை தந்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்பதும் ரெட் டிராகன் கேமரா கையாள வேண்டும் என்பது சூர்யா போட்ட கண்டிஷன் என கூறப்படுகிறது.

ரெட் டிராகன் கேமரா பயன்படுத்துவது பற்றி சந்தோஷ்சிவன் கூறியது: சினிமாவை பொறுத்தவரை புதிய தொழில் நுட்பங்கள் வரும்போது அதை கையாள தெரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் இப்படத்துக்கு ரெட் டிராகன் கேமரா பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமரா ஒரு இடத்தில் வாங்கப்பட்டதல்ல. பல இடங்களில் வாங்கப்பட்ட உபகரணங்களை கொண்டு முறைப்படி புதிதாக அசெம்பள் செய்யப்பட்டது. இதன் மூலம் 6 கே துல்லியத்தில் காட்சிகளை படமாக்க முடியும். காட்சி தெளிவில் இதுதான் சிறந்த அம்சமாக கருதப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஏஞ்சலிக்ஸ் லென்ஸ் கற்பனைக்கு எட்டாத அளவில் தரமான காட்சிகளை பதிவு செய்யும். -

tamil matrimony_HOME_468x60.gif
 

Comments