12th of November 2013
சென்னை::விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தின் பிஸினஸ் இரண்டே நாளில் அமோகமாக நடைபெற்று அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்திருக்கிறது.
‘தலைவா’ படம் சில பல காரணங்க
ளினால் தாமதமாக வெளியாகி, ‘பாக்ஸ் ஆபிஸ்’-ல் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் போனது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்படத்தின் பிஸினசை ஆரம்பித்த சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி , இரண்டே நாட்களில் , வெளிநாட்டு உரிமைகள் உட்பட அனைத்து ஏரியாக்களையும் விற்று விட்டார் என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர் குட் பிலிம்ஸுடன் விஜய் இணைந்த படங்களான, “திருப்பாச்சி, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, பூவே உனக்காக” ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
அந்த வரிசையில் இந்த படமும் இடம் பெறும் என விநியோகஸ்தர்கள் நம்புகிறாரகள்.
ம்ம்ம்…‘ஜில்லா’வை வச்சி நல்லா கட்டப் போறங்க ‘கல்லா’ ….(ஏற்கெனவே நாம சொன்னதுதான்….)
Comments
Post a Comment