20th of November 2013
சென்னை::உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சிம்புவும், நயன்தாராவும். வல்லவன் படத்தின் போது நிஜத்திலும், திரையிலும் காதலர்களாக இருந்தவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காதலர்களாகிறார்கள். இந்தமுறை திரையில் மட்டும்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெயரிடப்படாதப் படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்குமே என்று அவரை அணுகி கதை சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். கதையை கேட்ட நயன்தாரா உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சிம்புவைப் பொறுத்தவரை கரும்பு தின்ன கூலியா கதைதான். அவருக்கும் ஓகே.
கௌதம், சிம்பு நடிக்கும் படம் தொடங்கும் முன்பே திட்டமிட்டபடி முதல் ஷெட்யூலை பாண்டிராஜ் முடித்திருக்கிறார். சிம்பு, நயன்தாரா காம்பினேஷன் காட்சிகள் இன்னும் எடுக்கவில்லை. டிசம்பரில் திட்டமிட்டிருக்கிறார்கள்.
முன்னாள் காதலர்கள் ரன்பீர் கபூரும், கத்ரினா கபூரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த ஹே ஜவானி ஹே திவானி சூப்பர்ஹிட்டானது. பட ரிலீஸுக்குப் பிறகு இருவரும் வெளிநாடு டூர் சென்றதோடு பிரைவெட் பீச்சில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியானது. அதேகதைதான் இங்கேயும். சிம்பு, நயன்தாரா இணைகிறார்கள் என்பதே படம் பாதி ஹிட்டான மாதிரிதான்.
மீதி பாதி... டிசம்பர் வரட்டும் பார்ப்போம்...
சிம்பு, ஹன்சிகா பிரேக் அப்?!!!
சிம்பு, ஹன்சிகா பிரிஞ்சிட்டாங்களாமே? கோடம்பாக்க டீக்கடைகளில் இந்த பிரேக் அப் சாயாதான் அதிகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மைதானா இது என்று மான் கராத்தே டீம் நண்பரை கேட்டோம். மான் கராத்தேயில்தான் தற்போது ஹன்சிகா நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் ஷாட் முடிந்தால் ஓடிப்போய் முதலில் போனை காதில் ஒட்டிக் கொள்வதுதான் ஹன்சிகாவின் தினப்படி வேலை. எதிர்முனையில் இருப்பது சிம்பு என்று சொல்லத் தேவையில்லை. ஒருநாள் முகம் மலர்ந்திருக்கும், மறுநாள் அப்படியே எதிர்மறை. இவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்பா இருந்தால் எதுவாக இருந்தாலும் புட்டுக்கத்தானே பாஸ் செய்யும் என்றார் நண்பர்.
பாண்டிராஜ் படத்தில் சிம்பு ஜோடி நயன்தாரா என்பது உறுதியான பிறகுதான் இந்த பிரேக் அப் பேச்சே பிரபலமடைந்தது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஹன்சிகா முதலில் வந்து விருது வாங்கிச் சென்ற பிறகே சிம்பு என்ட்ரியானார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து பிரேக் உண்மைதான் என்கிறார்கள்.
சின்ன விஷயத்துக்கும் சிலிர்த்துக் கொண்டு பேட்டி தருகிற சிம்பு கம்மென்று இருப்பதைப் பார்த்தால் பட்சி பறந்திடுச்சி போலத்தான் தெரிகிறது.
Comments
Post a Comment