29th of November 2013
சென்னை::80களில் பல ஹிட் படங்களைக் கொடுத்து இன்று வரை புகழின் வெளிச்சத்தில் இருப்பவர் ராமராஜன்.செல்லமாக கிராமராஜன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன் விபத்தில் சிக்கி பல நாட்கள் ஓய்வில் இருந்தார்.இப்போது புதுத் தெம்புடன் மீண்டும் நடிக்க வருகிறார்.
வேல் பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வே.ஜெயன் தயாரிக்கும் ‘கும்பாபிஷேகம்’ என்ற படத்தில் ராமராஜன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
கதாநாயகியாக நூர்யா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
புஷ்பராஜ்.K.M எழுதி இயக்க சௌந்தர்யன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதையம்சத்தை மையமாகக் கொண்டு படம் உருவாகிறது.
கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது
Comments
Post a Comment