19th of November 2013
சென்னை::நடிகை அசின் இந்திக்கு போனார் பரபரவென சில படங்களில் நடித்தார். இப்போது கையில் படம் எதுவும் இல்லாமல் இருக்கிறார். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தூது விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றபோது அங்கு அவர் தன் வருங்கால கணவருடன் சென்றதாக செய்திகள் வந்தது.
இப்போது அதைப்பற்றி அசின் கூறியிருப்பதாவது: பொதுவாக இந்தி நடிகைகள் புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டுக்கு தங்கள் பாய்பிரண்டுடன்தான செல்வார்கள். நான் பெற்றோர்களுடன் சென்றேன் ஆனால் மும்பை மீடியாக்கள் பாய்பிரண்டுடன் சென்றதாக செய்திகளை பரப்பிவிட்டது. என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் திருமணம்தான். நமது மரபுபடி நான் திருமண வயதை எட்டிவிட்டேன். அதற்காக கல்யாண விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. சில இந்தி நடிகைகளைப்போல திருமணம் செய்யாமல் லிவ் இன் ரிலேஷன்சிப்பிலும் என்னால் வாழ முடியாது. வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்த தொடங்கி விட்டார்கள். நானும் நல்ல பார்ட்னரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என்றாலும் அடுத்த ஒரு வருடத்திற்கு திருமணம் இல்லை.
இவ்வாறு அசின் கூறியிருக்கிறார்.

Comments
Post a Comment