என் வாழ்க்கை சர்ச்சையானது: கமல்!!!

14th of November 2013
சென்னை::தனது முன்னாள் மனைவி சரிகா தன்னை பற்றி புத்தகம் வெளியிடுவதை கமல் ஹாஸன் தடுத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது என்று கமல் தெரிவித்துள்ளார். கமல் ஹாஸன் கடந்த 7ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்து புத்தகம் எழுதும் உரிமையை இரண்டு எழுத்தாளர்களுக்கு அவர் அளித்துள்ளார். ஆனால் அதே சமயம் தனக்கு நெருக்கமாக இருந்த ஒருவரை தன் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் வெளியிட அவர் அனுமதிக்கவில்லை.

கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகா உலக நாயகன் குறித்து புத்தகம் வெளியிட முயன்றார். ஆனால் அதை கமல் அனுமதிக்கவில்லை. இது குறித்து கமல் தன் நெருங்கிய நண்பரிடம் பின் வருமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது, என் வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது. அதனால் என் அனுமதி இல்லாமல் எழுதப்படுவதால் எனது மகள்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments