காமெடி நடிகர்கள் சந்தானம், சூரி மீது வடிவேலு பாய்ச்சல்!!!

4th of November 2013
சென்னை::காமெடி நடிகர்கள் சந்தானம், பரோட்டா சூரி மீது வடிவேலு மறைமுகமாக சாடியுள்ளார். நகைச்சுவை காட்சிகளை குடும்பத் தோடு பார்க்க முடிய வில்லை என்றார். வடிவேலு இரண்டு வருடத்துக்கு முன் சினிமாவில் நடிப்பதை திடீரென நிறுத்தினார்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியராக இருந்த அவரது இடத்தை சந்தானம், சூரி போன்றோர் பிடித்தனர். வடிவேலுவுக்கு பதில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் சந்தானம் காமெடி வேடம் செய்து வருகிறார். தினசரி சம்பளமாக ரூ. 10 லட்சத்துக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. சந்தானம் காமெடியில் ஆபாசம் இருப்பதாகவும் பெண்களை இழிவுபடுத்தி வசனம் பேசுகிறார் என்றும் பெண்கள் இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறது.

ஆல் இன்ஆல் அழகுராஜா படத்தில் சந்தானம் பேசிய ஆபாச வசனம் பெண்கள் சங்கத்தினர் எதிர்ப்பால் நீக்கப்பட்டது. தற்போது வடிவேலுவும் புதுப்படங்களில் இடம் பெறும் காமெடி காட்சிகளை கண்டித்துள்ளார். இதுகுறித்து வடிவேலு கூறும்போது, நான் நடிக்காத கால கட்டத்தில் சினிமாவுக்கு நிறைய காமெடியர்கள் வந்து விட்டார்கள் என்கின்றனர். நல்ல காமெடி யார் பண்ணினாலும் சிரிப்பு வந்தால் சிரிக்கலாம். நான் ஓரிரு படங்கள் பார்த்தேன். ஆனால் சிரிப்பு வரவில்லை.

முழு படத்தையும் உட்கார்ந்து பார்த்தால் எனது காமெடி நடிப்பை மறந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. இதனால் படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். உயிருக்கும் மனதுக்கும் கெடுதலான விஷயங்களை நம்மிடம் நெருங்க விடக்கூடாது. காமெடி என்கிற பெயரில் கெட்ட விஷயங்களை காட்டுகிறார்கள். மனைவி, குழந்தைகளோடு அவற்றை எப்படி உட்கார்ந்து பார்க்க முடியும். அந்த காட்சிகளை பார்க்கும் போது மன அழுத்தம்தான் வருகிறது. இதுபோன்றவற்றை பார்த்து மனதையும், கண்ணையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
 
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments