6th of November 2013
சென்னை::தனுஷ் நடித்துள்ள நய்யாண்டி படம் மீது மலையாள தயாரிப்பாளர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். தனுஷ், நஸ்ரியா நாசிம் நடித்த படம் நய்யாண்டி. சற்குணம் இயக்கி உள்ளார். இதில் டூப் நடிகையை வைத்து தான் நடித்ததுபோல் ஆபாச காட்சிகளை இயக்குனர் படமாக்கிவிட்டார் என்று சமீபத்தில் நஸ்ரியா நாசிம் போலீசில் புகார் அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இப்படத்துக்கு மற்றொரு பிரச்னை உருவாகி உள்ளது.
1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மேலபரம்பில் ஆண்வீடு என்ற படத்தை காப்பி அடித்து நய்யாண்டி உருவாக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் மணி சி.கப்பன் கூறி இருக்கிறார். அவர் கூறும்போது, நய்யாண்டி படத்தின் இரண்டாம் போஷன் (இடைவேளைக்கு பிறகு) முழுவதும் மேலபரம்பில் ஆண்வீடு படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது எனது அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் டைட்டிலில் தேங்க்ஸ் கார்டு போடப்பட்டிருக்கிறது. ஆனால் அது காப்பி ரைட் சட்டப்படி போதுமானதாக இல்லை.
இப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், படத்துக்கு தொடர்புடையவர்களை சந்தித்து பேசினேன். நான் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறேன். அதேபோல் சம்பந்தப்பட்டவர்களும் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காப்பி ரைட் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Comments
Post a Comment