21st of November 2013
சென்னை::சினிமாவில் நடிகைகள் ஒற்றுமையாக இருப்பது இல்லை. ஒருவரையொருவர் எதிரியாகவே பார்ப்பார்கள். போட்டியும் இருக்கும். ஒரு நடிகையின் படம் தோல்வி அடைந்தால் மற்ற நடிகை அதை விருந்து வைத்து கொண்டாடுவது உண்டு.
இவர்கள் மத்தியில் சமந்தாவும், காஜல் அகர்வாலும் வித்தியாசமாக தெரிகிறார்கள். இருவருக்கும் நெருக்கமா
ன நட்பு ஏற்பட்டு உள்ளது. தினமும் போனில் பேசிக் கொள்கின்றனர். பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கட்டிப் பிடித்து நலம் விசாரிக்கின்றனர்.
இருவரும் நெருங்கிய தோழிகளாக இருப்பதாக தெலுங்கு பட உலகில் பேசுகின்றனர். சமந்தாவும் காஜல் அகர்வாலும் ஏற்கனவே ‘பிருந்தாவனம்’ தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது விளம்பர படமொன்றிலும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
Comments
Post a Comment