17th of November 2013
சென்னை::கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனனும், அதையடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் இப்போது விஷாலுடன் பாண்டியநாடு படத்திலும் நடித்து பேசப்படும் நடிகையாகி விட்டார். அதோடு, கேரளத்தில் இருந்து வந்து நேரம் படம மூலம் வேகமாக வளர்ந்துவந்த நஸ்ரியா நய்யாண்டி பட விவகாரத்தினால் வேகத்தடையில் சிக்கியதால், இப்போது லட்சுமிமேனன் தங்கு தடையில்லாமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.
ஆக, தொடர் வெற்றியினால் ஹிட் லிஸ்ட் நடிகையாகிவிட்ட லட்சுமிமேனனுடன் நடிப்பதற்கு இப்போது மேல்தட்டு ஹீரோக்களே ரெடியாகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முன்னணி நடிகைகள் என்று சொல்லப்படுகிற நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுக்கே லட்சுமிமேனனின் அதிரடி வளர்ச்சி, தங்களுக்கு வரவேண்டிய புதிய படங்களுக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.

Comments
Post a Comment