ஒரே ஒரு கதாபாத்திரம் இடம்பெறும் 'என் உயிர் என் கையில்!!!

27th of November 2013
சென்னை::ரசிகர்களை திரையரங்குகளுக்குள் இழுக்க, இயக்குநர்கள் பல வித்தியாசமான முயற்சிகளை செய்கிறார்கள். அந்த வகையில், ஒரே ஒரு நடிகர் மட்டும் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி, புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் ராகுல் சிங் காக்வால்.

இப்படத்தில் அந்த ஒரே ஒரு நடிகராக ஜெய் அகாஷ் நடித்துள்ளார். 'என் உயிர் என் கையில்' என்று தலைப்பு வைக்கபப்ட்டுள்ள இப்படத்தில் கதாநாயகி இல்லை, காமெடி நடிகர்கள் இல்லை, மற்ற எந்த கதாபாத்திரமும் இல்லை.
ஜெய் ஆகாஷ் மட்டுமே இப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு நடிகர்கள் மட்டுமே நடித்த படம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளன. ஆனால், இந்திய சினிமா வரலாற்றில் ஒரே ஒரு நடிகர் நடித்து வெளிவரும் முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 6 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் மொத்தம் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் படமாகும். 6 மொழிகளிலும் ஜெய் ஆகாஷ் தான் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் திரையிடப்பட்ட, சில நிமிடங்கள் ஓடக் கூடிய டீசர் பார்த்தவர்களை வியபடைய வைத்தது.
tamil matrimony_HOME_468x60.gif


Comments