நடிகை திரிஷா விதவைகள் மறுமணத்துக்கு ஆதரவாக குரல்!!!

21st of November 2013
சென்னை::நடிகை திரிஷா விதவைகள் மறுமணத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். திரிஷா ஏற்கனவே ‘விலங்குகள் பாதுகாப்பு’ அமைப்பில் பொறுப்பு வகிக்கிறார். தெருவோர நாய்களை பிடித்து வளர்த்து தத்து கொடுத்தும் வருகிறார். தற்போது விதவைகள் மறுமணத்தை ஊக்குவித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
 
மும்பையில் நகைக்கடை விளரம்பர படம் ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் திருமண கோலத்தில் மணமகளும், மணமகனும் நெருப்பை சுற்றுவது போன்றும், அப்போது அருகில் நிற்கும் குழந்தையொன்று மணப்பெண்ணுடன் ஒட்டிக்கொண்டு வர முயற்சிப்பது போன்றும், மற்றவர்கள் தடுத்து நிறுத்துவது போலவும் மணமகன் அந்த குழந்தையை தூக்கி வைத்துக் கொள்வது போலவும் அந்த விளம்பரம் இருந்தது.
 
குழந்தை மணப்பெண்ணை அம்மா என்று அழைக்கும். அதன்பிறகுதான் அது விதவை திருமணம் என்பது தெரியவரும். இந்த விளம்பரம் திரிஷாவை மிகவும் கவர்ந்தது. அதை பாராட்டி டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து திரிஷா கூறும்போது, ‘விதவை மறுமணம் விளம்பர படத்தின் கரு மிகவும் பிடித்து இருந்தது. விதவை திருமணங்களை ஆதரிக்க வேண்டும். நமது நாட்டில் அறியாமையிலும் மூடத்தனத்திலும் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அதில் இருந்து விழிப்படைய வேண்டும் என்றார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments