19th of November 2013
சென்னை::சினிமா நடிகர்களையும், கிசு கிசுவையும் பிரிக்க முடியாது. அப்படி கிசு கிசுவில் சிக்காத நடிகர்கள் இருந்தால் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
லேட்டஸ்டா, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் கிசுகிசு என்று பார்த்தால் அது விஷால்-வரலட்சுமி காதலை பற்றிதான். ஆனால் இருவரும் நடிகர், நடிகைகள் கூறும் வழக்கமான பதிலை கூறுகிறார்கள். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் என்று பதிலளிக்கிறார்கள்.
சமீபத்தில் விக்ராந்தின் பிறந்த நாள் விழாவில் விக்ராந்த் அவரது மனைவியுடன் நடிகர் விஷ்ணு அவரது மனைவியுடன் உதயநிதி அவரது மனைவியுடன் இப்படி ஜோடியாக கலந்துகொண்டனர்.
ஆனால் விஷாலோ வரலட்சுமியுடன் வந்திருந்தார். அதுதவிர, தொடர்ந்து நடைபெற்ற விருது விழா ஒன்றிலும் விஷால், வரலட்சுமி ஜோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் திருமணம் பற்றி இப்போதே பேச்சு பரவ ஆரம்பித்துள்ளது.
ஆனால் இதை இருவரும் உறுதி செய்யவில்லை. சினிமாவில் சாதிக்க விரும்புகிறாராம் வரலட்சுமி. இதனால் 2 ஆண்டுகள் கழித்தே இவர்கள் திருமணம் நடைபெறும் என இவர்களின் நட்பு வட்டாரம் கூறுகிறது.
யார் இந்த வரலட்சுமி? நடிகர் சங்க தலைவர் சரத்குமாரின் மகளும், போடா போடி நாயகியும்தான் இந்த வரலட்சுமி.
Comments
Post a Comment