15th of November 2013
சென்னை::'கல்லூரி' படத்தில், ஒன்றும் தெரியாத பெண்ணாக தமிழுக்கு வந்தார், தமன்னா. அதற்கு பின், அடுத்தடுத்து ஹிட் கொடுத்து, ரசிகர்களின் மனதில், இடம் பிடித்தார். பின், பாலிவுட்டுக்கு சென்று விட்டு, மீண்டும், தமிழ், தெலுங்கில், இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளார்.
சமீபகாலமாக, அவர் நடிக்கும் படங்களில், நடன காட்சிகளில், அவர் ஆடுவதை பார்த்து, மிரண்டு போயிருக்கிறது, திரையுலகம். அதிலும், தெலுங்கு படங்களில், அவரின் நடன வேகத்தை கண்டு, அரண்டு போயிருக்கின்றனர், ஆந்திர ஹீரோக்கள்.
அவரின் வேகத்துக்கு, ஜோடி போட்டு ஆட முடியாமல், 'டூயட் பாடலாக இருந்தாலும், தமன்னாவின் நடன காட்சிகளை தனியாக படம்பிடித்து விடுங்கள். அவர் வேகத்துக்கு, நம்மால் ஈடு கொடுக்க முடியாது' என, ஜகா வாங்கத் துவங்கியிருக்கின்றனர், தெலுங்கு ஹீரோக்கள். மற்றும் சிலரோ, 'தமன்னாவா, அய்யய்யோ, அந்த பொண்ணு, பிசாசு வேகத்தில் ஆடுமே. அந்த பெண்ணுடன் சேர்ந்து ஆடினால், நமக்கு பெண்டு கழன்று விடுமே' என, பின் வாங்குகின்றனராம்.
Comments
Post a Comment