23rd of November 2013
சென்னை::இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜீ.வி.பிரகாஷின் அடுத்த அவதாரம் தயாரிப்பாளர்.
இவரின் ஜீ.வி.பிரகாஷ்குமார் புரொடக்ஷனின் முதல் தயாரிப்பான மதயானைக் கூட்டம் வெற்றிகரமாக முடிந்து படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையையும் ஜேஎஸ்கே நிறுவனத்துக்கு கைமாற்றியிருக்கிறார்.
அதாவது அந்தப் படத்தைப் பற்றி ஜீ.வி.பிரகாஷ் இனி கவலைப்பட தேவையில்லை, லாபத்தை எண்ணினால் போதும்.
மூன்றாவது அவதாரம்தான் நடிகன்.
ஜீ.வி. ஹீரோவாக நடிக்கும் பென்சில் படத்தின் போட்டோஷூட் படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனாக ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடி வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா.
மூன்றாவதும் ஹாட்ரிக் வெற்றியாக அமையட்டும்.
Comments
Post a Comment