14th of November 2013
சென்னை::நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு வெற்றி. அதுவும் தனது முதல் தயாரிப்பில். கொண்டாடி தீர்ப்பது என்று முடிவு செய்துவிட்டார் விஷால். படத்தை விளம்பரப்படுத்தவும், ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் ஊர் ஊராக சென்றுகொண்டிருப்பவர் அளித்த பேட்டியின் சருக்கம் இங்கே உங்களுக்காக.
பாண்டிய நாடு
பாண்டிய நாடு படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. கூடுதலாக 70 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருப்பதே இதற்குச் சான்று.தமிழகம், புதுவை மட்டுமின்றி வேறு மாநிலங்களில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வித்தியாசமான கதாபாத்திரம்
இந்தப் படத்தில் வழக்கத்துக்கு மாறான பயந்த சுபாவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அது பொருத்தமாக இருக்குமா என்று பலருக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அதனை முறியடிக்கும்வகையில் படம் ஓடுவது மகிழ்ச்சியளிக்கிறது. பல புதிய கதாபாத்திரங்களில் நடிக்க இந்தப் படம் வழிகாட்டும் என்று நம்புகிறேன்.
ரசிகர்கள் சந்திப்பு
நல்ல விஷயம் செய்யும் போது முதலில் கோவிலுக்கு போக வேண்டும் என்பார்கள். எனது ரசிகர்கள்தான் எனக்கு தெய்வம். அதுதான் அவர்களை சந்திக்கிறேன். இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு ரசிகர்கள்தான் காரணம். தியேட்டர்கள் திருமண மண்டபமாக மாறிவரும் சூழலில் பாண்டிய நாடு படத்தைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு அதிகளவில் வந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்தப் படமாக இருந்தாலும் திருட்டு விசிடி யில் பார்க்காமல் தியே
ட்டரில் பார்க்க வேண்டும்.
அடுத்தப் படம்?
அடுத்து திரு டைரக்ஷனில் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக்கிறேன். யுடிவி யுடன் இணைந்து நானே தயாரிக்கிறேன். அடுத்த வருடம் ஏப்ரல் 11 ஆம் தேதி படம் வெளியாகும். அதற்குமுன் கிறிஸ்மஸ் அல்லது பொங்கலுக்கு மத கஜ ராஜா வெளியாகும்.
திருமணம்
எனக்கு அப்படியொன்றும் வயதாகவில்லை. அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது.
காதல்
நான் ஒருத்தரை காதலிக்கிறேன். என் காதலி யார் என்பதை நேரம் வரும் போது தெரிவிப்பேன்
Comments
Post a Comment