23rd of November 2013
சென்னை::வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மைக்கேல் ராயப்பனும், இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கும் 'ஈட்டி' திரைப்படத்தில் அதர்வாவின் ஜோடியாக இவர் தோன்றுகின்றார்.
இயக்குநர் வெற்றிமாறனின் 'ஆடுகளம்' படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய ரவி அரசு இந்தப் படத்தின் இயக்குனராக அறிமுகமாகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையில் ஸ்ரீதிவ்யா 'காட்டுமல்லி', ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'பென்சில்', நடிகர் விஷ்ணுவுடன் ஜோடியாக இயக்குநர் சுசீந்திரனின் பெயரிடப்படாத படம் போன்ற சில தயாரிப்புகளிலும் நடித்து வருகின்றார்.

Comments
Post a Comment