சென்னை::காலில் ஏற்பட்ட காயத்துக்காக அஜீத்துக்கு அடுத்த மாதம் அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது.
விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஆரம்பம்' படத்தில் நடித்தபோது கார் சேஸிங் காட்சியில் டூப் போடாமல் நடித்தார் அஜீத். அப்போது அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்குச் சென்ற அஜீத் காயத்திற்கு தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து நடித்தார். இதனிடையே அவருக்கு காலில் நாளுக்கு நாள் வலி அதிகமானது.
அஜீத் மீண்டும் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொண்டபோது, அறுவைசிகிச்சை செய்தால்தான் வலி குறையும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அவ்வாறு அறுவைசிகிச்சை செய்து கொண்டால், பட அதிபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், 2 படங்களில் நடித்து முடித்துக் கொடுத்தபின், அறுவைசிகிச்சை செய்துகொள்வதென அஜீத் முடிவு செய்திருந்தார்.
ஏற்கெனவே அஜீத் நடித்த ஆரம்பம் படம் வெளியாகிவிட்டது.
தற்போது அவர் வீரம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வீரம் படத்தில் அஜீத் சம்மந்தப்பட்ட காட்சிகள் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பிறகு டிசம்பரிலே அவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலில் அறுவைசிகிச்சை செய்துகொள்ள இருக்கிறார்.
தொடர்ந்து அவர் 2 மாதங்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு பிப்ரவரி 15ம் தேதி முதல் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார்.
Comments
Post a Comment