25th of November 2013
சென்னை::பண்ணையாரும் பத்மினியும்” குறும்படமாக வெளிவந்து பாராட்டுக்கள் பெற்ற படம். இக்குறும்படத்தை அதே பெயரிலேயே இயக்கியுள்ளார் எஸ்.யு. அருண்குமார்.
இப்படத்தை எம்.ஆர்.கணேஷ் தயாரித்துள்ளார். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரர் இசையமைத்துள்ளார். மறைந்த கவிஞர் வாலி இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா, நீலிமா, ஜெயப்பிரகாஷ், சினேகா மற்றும பலர் நடித்துள்ள பண்ணையாரும் பத்மினியும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைந்தது.
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், செயற்குழு உறுப்பினர் ஆர்.வி.உதயகுமார், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, ராம், விக்னேஷ் சிவன் இவர்களுடன் தெலுங்குத் திரைப்பட ஹீரோ நானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர்.
அப்போது பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், விஜய் சேதுபதியை நான் ரொம்ப காலமாக பார்க்கிறேன். ஒரு ஹீரோவுக்கான இலக்கணத்தை உடைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு ஹீரோ இப்படித்தான் நடக்கணும், இருக்கணும் என்பதையெல்லாம் மாற்றியிருக்கிறார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகும்போது கூட அவரின் குணம் மாறாம அப்படியே இருக்கார். அவரை பார்த்துக்கொண்டு ‘மவனே… நீ மட்டும் மாறுனா இங்கே காணாமல் போயிருவ” ஜாக்கிரதை! என அன்புடன் கண்டிக்கவும் செய்தார்.
மேலும் பேசிய அவர், இன்றைக்கு உள்ள ஹீரோக்கள், இயக்குனர்கள், இண்டு படம் ஓடினதுமே ஏதோ இவர்கள்தான் சினிமாவையே கண்டுபிடித்தவர்கள் மாதிரி பேசுவதைப் பார்க்கிறேன். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அப்படி இல்லை. நிச்சயம் பெரிய ஆளா வருவார் என்றார்.
Comments
Post a Comment