13th of November 2013
சென்னை::பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் ஜிகிர்தண்டா. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். லட்சுமிமேனன் ஹீரோயின். இதன் முதல்கட்ட ஷூட்டிங் மதுரையில் நடந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இதுகுறித்து டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பீட்சா வெளியான பிறகு ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் ஜிகிர்தாண்டாவை இயக்கி வருகிறேன். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து விட்டது. வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யும் வகையில் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறோம். பீட்சாவை போன்று இதுவும் மக்களை கவரும். பீட்சா தயாரிப்பாளர் சி.வி.குமரன் தயாரிப்பில் தற்போது ரிலீசாக இருக்கும் பீட்சா&2 தி வில்லா வெற்றி பெறவும், இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி வெற்றி பெறவும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment