பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்க மாட்டேன் : லைலா!!!

8th of November 2013
சென்னை::பார்த்தேன் பார்த்தேன்... ரசித்தேன் ரசித்தேன்... என பார்த்த மாத்திரத்தில் ரசிகர்களை ரசிக்க வைத்தவர் நடிகை லைலா. கள்ளழகர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஈரானிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் லைலா மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான நேரம் பார்த்து கொண்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி இதோ...

* நீங்களே குழந்தை மாதிரி இருப்பீங்க. உங்களுக்கு இரண்டு குழந்தைகளா, ஆச்சர்யமாயிருக்கே?

முன்னாடி இருந்த லைலா, இப்போ இல்லை. ரொம்ப பொறுப்பு அதிகமாயிடுச்சு. உதவிக்கு ஆட்கள் இருக்காங்க, ஆனாலும் நான் தான் குழந்தைகளை கவனிக்கிறேன். இது, ஒரு புதிய உலகம். ரொம்பவே அனுபவித்து வாழ்கிறேன்.

* கோலிவுட் ரசிகர்களை மிஸ் பண்றீங்களா?

ஆமாம். அந்த பீலிங், அப்பப்ப வரும். ஆனால், இன்னும், இங்கே இருக்கும், நண்பர்கள், தோழிகள் கூட, பேசிட்டு தான் இருக்கேன். இப்போது, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், அடிக்கடி சென்னை வந்திடுறேன்.

* திடீரென, என்ன சின்னதிரை மீது ஆர்வம்?

என்னால நிறைய கமிட்மென்ட் கொடுக்க முடியாது. அதனால், நிறைய ஒத்துக்கிறது இல்லை, சின்னத்திரை ரசிகர்களோட பங்கு பெறுவது புதிய அனுபவம்; சந்தோஷமா இருக்கு. எனக்கு டைம் அட்ஜஸ்ட் செய்ற மாதிரி, ஒத்து வந்தால் மட்டுமே, சின்னத் திரையில் நடிக்க ஒத்துக்கிறேன்.

* திருமணத்துக்கு முன் லைலா, திருமணத்துக்கு பின் லைலா, என்ன வித்தியாசம்?

திருமணத்துக்கு முன், முழு நேர நடிகையா ஓடிட்டு இருந்தேன். இப்போது, முழுநேரமும் குடும்பத்தினரோடு, குழந்தைகள், கணவர்னு கொஞ்சம் பிசியா இருக்கேன். இப்போது, கொஞ்சம் கூடுதலான பொறுப்பு வந்திருக்கு. அது தான் உண்மை.

* அண்ணி, அக்கா கேரக்டர்களில் நடிக்க, நீங்க ரெடியா?

அய்யய்யோ, என் ரசிகர்களுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை. எனக்கு அதில் ஆர்வம் இல்லை. ரொம்ப அழுத்தமான ரோல் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். இந்தியில் வெளிவந்த, லஞ்ச்பாக்ஸ் படம் மாதிரி, தமிழ்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் நடிப்பேன். மற்றபடி, எனக்கு பிடிக்காத, மற்ற ரோல் என்ன கிடைத்தாலும், பணத்துக்காக ஒரு படமும் செய்யமாட்டேன். இதில் நான் தெளிவாக இருக்கேன்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments