12th of November 2013
சென்னை::கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்தால் சம்பளத்தை உயர்த்தாமல் இருந்தால்தான் தப்பு.
அதனால்தான், தனது சம்பளத்தை 40 லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டாராம் லட்சுமி மேனன். பெயரிலேயே லட்சுமி வைத்திருக்கிறாரே அது போதாதா சம்பளத்தை உயர்த்த…
பொதுவாக, ஒரு நடிகை நடிக்கும் ஒரு படம் வெற்றி பெற்றாலே அவரை ராசியான நடிகை என தங்களது படங்களில் நடிக்க வைக்க அனைவரும் முயற்சிப்பார்கள்.
லட்சுமி மேனன் விஷயத்தில் நடித்த நான்கு படங்களுமே ஹிட். சும்மாவா விடுவார்கள். அதனால்தான் தற்போது, “விஷால் ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன், சித்தார்த் ஜோடியாக ‘ஜிகர்தண்டா, கவுதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய், விமலுடன் ‘மஞ்சப்பை, விஜய் சேதுபதியுடன் ‘வசந்தகுமரன்’ என பல படங்களில் நடித்து வருகிறார்.
இது இப்படியே தொடர்ந்தால் மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி விட்டு 2014ம் ஆண்டில் நம்பர் 1 நடிகையாக லட்சுமி மேனன் உயர்ந்து விடுவாரோ என மற்ற நடிகைகள் அஞ்சுகிறார்களாம்…
Comments
Post a Comment