11th of November 2013
சென்னை::ஜில்லா’ படத்திற்காக , இமான் இசையமைப்பில், விஜய் பாடும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் வைரமுத்து.
கண்டாங்கி கண்டாங்கி…கட்டி வந்த பொண்ணு…கண்டாலே கிறுக்கேத்தும்…கஞ்சா வச்ச கண்ணு…’ எனத் தொடங்கும் பாடல் ஒன்றை எழுதியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்பாடலைப் படித்துப் பார்த்ததும், எங்கே பட வெளியீட்டின் போது , சென்சாரில் கத்தரிப்பார்களே என இமான் அஞ்சினாராம். ஆனால், வைரமுத்துவோ, கஞ்சா வைத்த பொண்ணைத்தான் பிடிப்பார்கள், கஞ்சா வைத்த கண்ணை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று சொன்னாராம்.
அப்படியே, ஏதாவது பிரச்சனை வந்தால் நான் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், இப்படி ‘கஞ்சா…’ என்றெல்லாம் பாட்டெழுவதுவது கவிஞருக்கு சரியா என்றுதான் நமக்கு கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கெனவே ஒரு நடிகர் ‘கஞ்சா’ கருப்பு என பெயர் வைத்துக் கொண்டு மறைமுகமாக போதையைப் பற்றி தூண்ட வைக்கிறார்.
புகை பிடிக்கும் காட்சிக
ளுக்கு அறிவிப்பை போட வேண்டும் என்று சொல்லியிருப்பதைப் போல இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
ஏனென்றால், விஜய் போன்ற நடிகர் பாடும் போது அது சின்ன குழந்தைகளையும் சீக்கிரம் சென்றடைந்து விடும்.
பிஞ்சின் மனதில் நஞ்சை…சாரி..‘கஞ்சாவை’ விதைக்காதீர்கள் கவிஞர்களே…
Comments
Post a Comment