புது படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை - சொல்கிறார் சிம்பு!!!

6th of November 2013
சென்னை::ஹன்சிகாவுடன் நடிக்கும் வாலு ரிலீஸ் எப்போது என்றதற்கு பதில் அளித்தார் சிம்பு. சிம்பு, ஹன்சிகா காதல் ஜோடி நடித்துள்ள படம் வாலு. இப்பட ஷூட்டிங் முடிவடைந்தது. இப்படத்தில்தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த பட ரிலீஸ் தாமதம் ஆகிறது. மேலும் கன்னடத்தில் வெளியான கோவிந்தா நமஹா படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிப்பார் என்றும் கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய பவன் வேறுவொரு படத்தில் பிஸியாக இருப்பதால் தமிழ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பு புது இயக்குனரிடம் வழங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது பற்றி சிம்புவிடம் கேட்டபோது பதில் அளித்தார். கன்னட ரீமேக்கில் நான் நடிக்கவில்லை. இதுவரை அந்த படத்தை நான் பார்க்கக்கூட இல்லை. மேலும் என்னிடம் கால்ஷீட்டும் இல்லை. நானும், ஹன்சிகாவும் நடித்த வாலு படம் எப்போது ரிலீஸ் என்கிறார்கள். இப்படத்தை தனியாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எண்ணி உள்ளார். அதனால்தான் படத்தின் ஆடியோ ரிலீஸும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் அல்லது ஜனவரியில் படம் ரிலீஸ் ஆகும் என்றார்.

வாலு படத்தை முடித்துவிட்ட சிம்பு, இப்போதைக்கு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்கிறார். இந்நிலையில் கன்னட ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் இல¢லை என அவர் கூறுவது அப்பட யூனிட்டுக்கு அதிர்ச்சி தந்துள்ளதாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments