1st of November 2013
சென்னை::சிம்பு தான் நடித்தப் படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்க்கிறாரோ இல்லையோ, அஜித் நடித்த படத்தை முதல் நாள் முதல் காட்சி, அதுவும் திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதை தனது தலையாய கடமையாக வைத்துள்ளார். அந்த வகையில், அவருடைய கடமையை செய்வதற்காக, சென்னையில் உள்ள காசி திரையரங்கத்திற்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு வந்தார்.
அஜித்தின் 'ஆரம்பம்' படம் காசி திரையரங்கில் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி சில பல திரையுலக தலைகளும், தல படத்தைப் பார்க்க அங்கு ஆஜார் ஆனார்கள். அதில் முதல் ஆளாக ஆஜர் ஆன சிம்பு படம் முடிந்ததும் வெளியே வந்த போது, அஜித் ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டு, "தல படம் எப்படி....சொல்லு....சொல்லு...." என்று ரொம்பவே லொல்லு செய்துவிட்டார்கள்.
பிறகு அவர்களை சமாளித்து எப்படியோ சிம்புவை, அவருடைய காருக்குள் அமர வைத்தால், காரை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள், சுமார் அரை மணி நேரம் காரை விடவில்லை. இது போதாது என்று, "டேய் சிம்பு வெளியே வாடா..." என்று சிலர் சத்தம் போட்டவாறு காரை நெருங்கினார்கள். பிறகு எப்படியோ ஆமை வேகத்தில் நகர்ந்து நகர்ந்து கார் புறப்பட்டு, அங்கிருந்து வந்தாபோதும் என்ற ரீதியில் சிம்பு கிளம்பிவிட்டார்.
என்னமா பாசத்த காட்டுராங்க பயபுள்ளிங்க....

Comments
Post a Comment