1st of November 2013
சென்னை::படங்களில் அதிரடி காட்டும் அஜீத், வெளித் தோற்றத்தில், தன்னை மென்மையானவராகவே, காட்டிக் கொள்வார். முதலில் எல்லாம், திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதில், அவசரம் காட்ட மாட்டார். நீண்ட பரிசீலனைக்கு பின்பு தான், படங்களில் நடிக்க சம்மதிப்பார்.
அவரின் படங்கள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தான், வெளியாகும். இதனால், அவரின் ரசிகர்கள் வருத்தப்பட்டனர். தற்போது, ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, செயல்பட முடிவு செய்து விட்டார். இதையடுத்து, மள மளவென, புதுப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆரம்பம், வீரம் ஆகிய படங்களை அடுத்து, கவுதம் மேனன் இயக்கும் படத்தில், அவர் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை, ஹாலிவுட்டுக்கு இணையாக, பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனராம்.
இப்படத்தை, ஹாலிவுட்டுக்கு இணையாக, பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனராம்.
Comments
Post a Comment