விக்ரம் பிரபு டாப் 6 ஹீரோக்களில் இடம்பெறுவார்: தயாரிப்பாளர் போஸ்!!!


28th of November 2013
சென்னை::விக்ரம் பிரபு டாப் 6 ஹீரோக்கள் வரிசையில் இடம்பெறுவார் என்று தயாரிப்பாளர் போஸ் தெரிவித்துள்ளார்.

எங்கேயும் எப்போதும்’ படத்தைத் தொடர்ந்து எம்.சரவணன் இயக்கும் புதிய படம் ‘இவன் வேற மாதிரி’.  இதில் கும்கியில் அறிமுகமான விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தில்லியைச் சேர்ந்த மாடல் அழகி நடிக்கிறார். யுடிவி மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. எம்.சத்யா இசையமைக்கிறார். படம் வரும் 13-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் ‘இவன் வேற மாதிரி’ படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது தயாரிப்பாளர் போஸ் பேசும்போது, இயக்குனர் சரவணன், 'இவன் வேற மாதிரி' ஸ்கிரிப்ட்டை 50% தான் சொன்னார். படம் பார்த்தேன் 50% ஸ்கிரிப்டை விட படம் 200% சூப்பரா வந்திருக்கு.

இந்த மாதிரியான நேர்த்தியான ஒரு ஸ்கிரிப்டை சமீபத்தில நான் பார்க்கல. ஒரு குட்டி முருகதாஸ் மாதிரி அவர் படம் எடுத்திருக்கிறார். விக்ரம் பிரபு ‘திருப்பதி பிரதர்ஸ்’ அறிமுகபடுத்திய ஹீரோ. ‘கும்கி’யில் பார்த்த விக்ரம் பிரபு இந்த படத்தில வேற மதிரி இருக்கிறார். ஆக்‌ஷன், டான்ஸ், பெர்ஃபார்மன்ஸ் என பிரமாதமாக பண்ணியிருக்கிறார். படம் ரிலீஸ் ஆன பிறகு டாப் 6 ஹீரோக்களோட இவரும் ஒரு ஹீரோவா இருப்பார்’’ என்றார்.

விக்ரம்பிரபு பேசும்போது, கும்கி படத்துக்குப் பிறகு அந்த படத்திலிருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதுபோல், இந்த படம் கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்திற்காக ரொம்பவும் ரத்தம் சிந்தி உழைத்தோம் என்றார்.
 
tamil matrimony_HOME_468x60.gif

Comments