50வது சினிமா ஆண்டில் அடியெடுத்து வைத்த சங்கர் கணேஷ்!!!

19th of November 2013
சென்னை::பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், சினிமாவில் தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த சங்கர் கணேஷின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி, அவருடைய 65வது பிறந்தநாள் தினத்தன்று, பிரம்மாண்ட விழா ஒன்று சென்னை, காமராஜர் அரங்கத்தில் சமீபத்தில் நடத்தப்பட்டது.

இவ்விழாவை 48 மணி நேர உலக சாதனை இசை நிகழ்ச்சி புரிந்த ஸ்ரீ கிருஷ்ணாவின் ஸரிகமபதநி மற்றும் நக்ஷத்ரா பவுண்டேஷன் உரிமையாளர் மேதிவ், நவீன் பைன் ஆர்ட்ஸ் பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இந்த விழாவிற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலு ஆனந்த், ஜே.வி.ருக்மாங்கதன், நடிகர்கள் சின்னி ஜெயந்த், போண்டாமணி, சுருளி மனோகர் ஆகியோர் கலந்துகொண்டு கலைமாமணி சங்கர் கணேசை வாழ்த்தினார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ், சங்கர் கணேஷின் பட்டறையில் உருவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹாரிஷ் பேசுகையில், "என் தந்தையின் நண்பர் கணேஷ். அவரது இசையின் தாகதினாலேயே நான் இசையமைப்பாளர் ஆனேன். அவர் எனக்கு கற்றுக்கொடுத்த இசை தான் தற்போது என்னை முன்னணி இசையமைப்பாளராக ஆக்கியுள்ளது." என்றார்.

சங்கர் கணேஷ பேசுகையில், "என் பிறந்தநாளை இவ்வளவு விமர்சியாக இதுவரை நான் கொண்டாடியது இல்லை. எனது ஒவ்வொறு பிறந்த நாளையும், எனது இல்லத்தில் உணவு சமைத்து, அதை ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, அந்த உணவில் இருந்து ஒரு பகுதியை எடுத்து குடும்பத்துடன் உண்ணுவோம். இப்படித்தான் எனது ஒவ்வொரு பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. எனது ரசிகர்களும், என் மீது அன்பு வைத்திருக்கும் இசைக் கலைஞர்களும் விருப்பப்பட்டு இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்." என்றார்.

விழாவில் 48 மணி நேர  உலக சாதனை இசை நிகழ்ச்சி புரிந்த ஸ்ரீ கிருஷ்ணாவின் ஸரிகமபதநி இசை குழுவினர் சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்த பாடல்களை பாடி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மெய்மறக்க செய்தனர்.

சங்கர் கணேஷ் 1963ஆம் ஆண்டு, 'மகராசி' என்ற திரைப்படத்தில்  கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற நான்கு மொழிகளில் சுமார் 1050 படங்களை தாண்டி இசையமைத்து, தற்போது பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

இசையமைப்பாளராக இருந்த இவர், 'ஒத்தையடி பாதையிலே' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, தொடர்ந்து ஏழு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், ஜெகதல பிரதாபன், நான் உன்ன நெனச்சன் ஆகியப் படங்களை இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.

தற்போது பப்பு கொப்பம்மா, கருவேலன், இயக்குநர் போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் சங்கர் கணேஷ், வின் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி வருகிறார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments