5th of November 2013
சென்னை::நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியாநசீமுக்கு அதற்கடுத்து 5 படங்கள் புக்காகும் நிலை இருந்தது. ஆனால் துக்கடா தொப்புள் விவகாரத்தை அம்மணி மலையளவு பிரச்னையாக்கியதால் கோலிவுட்டே பலத்த அதிர்ச்சியடைந்தது. அதையடுத்து தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் அவர் நடிப்பதைப்பார்த்து அடுத்து அவரது மார்க்கெட் எகிறப்போகிறது என்று நினைத்து கால்சீட்டுக்காக படையெடுத்த அத்தனைபேருமே கழட்டிவிட்டு விட்டனர்.
அந்த வகையில், 5 படங்கள் வரை இழந்திருக்கிறார் நஸ்ரியா. தற்போது அவரது கைவசம் ஜெய்யுடன் நடிக்கும் திருமணம் என்னும் நிக்கா மற்றும் பாலாஜி மோகன் இயக்கும் படம் என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. இதில் திருமணம் என்னும் நிக்காதான் அவர் தமிழில் ஒப்பந்தமான முதல் படம். ஆக, இந்த தொப்புள் சர்ச்சைக்குப்பிறகு அவருக்கு புக்காகியிருப்பது பாலாஜி மோகன் படம் மட்டுமே. இந்த படத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பதால், தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் படத்தை வெளியிடுவதால், இரண்டு மொழிக்கும் பரிட்சயமான நடிகை உடனடியாக கிடைக்காமல் நஸ்ரியா பக்கம் சாய்ந்திருக்கிறார்களாம்.
இப்படி எதிர்பாராதவிதமாக மார்க்கெட் சரிந்து விட்டதால், இனி கோடம்பாக்கத்தை நம்பி புண்ணியம் இல்லை என்று முடிவெடுத்து விட்ட நஸ்ரியா, தனது தாய்மொழியான மலையாளத்தில் ஆழக்காலூன்ற முடிவெடுத்து விட்டார். அதனால் சென்னையில் வீடு பார்த்து குடியேறி வந்தவர் அந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டிருக்கிறார்.

Comments
Post a Comment