3rd of November 2013
சென்னை::இந்தி நடிகர் ஷாருக்கான் நேற்று 47 வயது முடிவடைந்து 48-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி தனது பிறந்த நாளை அவர் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
ஏராளமான இந்தி திரையுலக பிரமுகர்கள் டெலிபோன், டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் வீட்டின் வெளியே காத்திருந்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்களை நோக்கி ஷாருக்கான் கையசைத்து நன்றி தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து தன் கருத்தை ஷாருக்கான், டுவிட்டர் வலைதளத்தில் பதிவு செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அனைவருக்கும் நன்றி. எனது வீட்டிற்கு வெளியே கையில் பட்டாசு மற்றும் சுவரொட்டிகளை கொண்டு எனக்காக வாழ்த்து தெரிவிக்க வந்த என் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அன்பு என்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
இந்தி நடிகர் அபிசேக் பச்சன், எனது அருமை நண்பரும் வாழ்வின் சிறந்த வழிகாட்டியுமான ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். அவருக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமையும் என வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
ராஜஸ்தான் ராயல் கிரிக்கெட் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா, நடிகர் போமான் இரானி, நடிகர் ரிதேஷ் தேஷ்முக் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Comments
Post a Comment