25th of November 2013
சென்னை:: கமல் நடித்த நாயகன் படத்தின் 2–ம் பாகத்தை தயாரிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. நாயகன் படம் 1987–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல் ஜோடியாக சரண்யா நடித்து இருந்தார். கார்த்திகா, ஜனகராஜ், நாசர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர். மணிரத்னம் இயக்கினார். இளையராஜா இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தில் வேலு
நாயக்கர் கேரக்டரில் கமல் நடித்து இருந்தார். இதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. நீ ஒரு காதல் சங்கீதம், தென்பாண்டி சீமையிலே, நிலா அது வானத்து மேலே, நான் சிரித்தால் தீபாவளி, அந்தி மழை மேகம் போன்ற இனிமையான பாடல்கள் இதில் உள்ளன.
நாயகன் படத்தின் 2–ம் பாகத்தில் கமலஹாசன், தந்தை மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். தந்தை கமலுக்கு ஜோடியாக பழைய நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார்.
Comments
Post a Comment