22nd of November 2013சென்னை::சிம்புவுடன் நடிக்க நயன்தாரா ரூ.2 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா சமீபத்தில் நடித்த ராஜா ராணி, ஆரம்பம் படங்கள் ஹிட்டாகியுள்ளன. பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டு ஒரு வருடம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் காதலில் முறிவு ஏற்பட்டு மீண்டும் நடிக்க வந்தார்.
ரசிகர்கள் பழைய மாதிரி வரவேற்பு அளிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இரு படங்களும் வசூல் குவித்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது சுந்தரபாண்டியன் ஹிட் படத்தை எடுத்த பிரபாகரன் இயக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் வாங்கியதாக செய்திகள் பரவி உள்ளன.
இந்தியில் வித்யாபாலன் நடித்து ஹிட்டான கஹானி படம் அனாமிகா என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். ரூ.2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிம்புவுடன் நடிக்க ரூ.2 கோடி கேட்கிறார் என்கின்றனர்.
சிம்புவுடன் நயன்தாரா நடித்தால் படத்துக்கு பெரிய விளம்பரம் கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இதனால் நயன்தாரா கேட்ட சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. முன்னதாக சிம்புவையும் நயன்தாராவையும் வைத்து போட்டோ ஷூட் நடத்த உள்ளனர். இதற்காக ஓரிரு தினங்களில் நயன்தாரா சென்னை வருகிறார். அப்போது சிம்புவும் நயன்தாராவும் சந்தித்து பேசி நட்பை புதுப்பிக்கின்றனர்.

Comments
Post a Comment