19th of November 2013
சென்னை::அஜீத்குமார் – கௌதம் மேனன் முதன் முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ம் தேதி முதல் துவங்கவிருக்கிறது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த துருவநட்சத்திரம்’ படம் பூஜை போட்டு பிறகு கைவிடப்பட்டது. இதையடுத்து கௌதம் மேனன், அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். இது குறித்து முறையான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதன்பிறகு படம் குறித்து எவ்வித விவரமும் வெளியிடப்படவில்லை.
இதனிடையில் குறுகிய கால இயக்கமாக சிம்பு நடிக்கும் படத்தை கௌதம் மேனன் கடந்த வாரம் ஆரம்பித்தார். இதனால் அஜீத்துடன், கௌதம் மேனன் இணையும் படம் என்னவாயிற்று என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதத்தில் கௌதம் மேனன் அஜீத் படம் பற்றிய தகவலை வெளியிட்டார்.
தான், அஜீத்தை வைத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி துவங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அஜீத், தமன்னா நடிக்கும் வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதனால் அஜீத் அந்த படத்தின் வேலைகளில் தற்போது பிஸியாக உள்ளார்.
Comments
Post a Comment