21st of November 2013
சென்னை::இப்பலாம் எண்களுக்குத்தான் மதிப்பு அதிகம்…உடனே, நியூமராலஜின்னு நினைச்சிடாதீங்க..
சென்னை::இப்பலாம் எண்களுக்குத்தான் மதிப்பு அதிகம்…உடனே, நியூமராலஜின்னு நினைச்சிடாதீங்க..
ஃபேஸ்புக், ட்விட்டர், யூ டியுப் – இவற்றில் நம்மை எத்தனை பேர் தொடர்கிறார்கள் என்பதுதான் மதிப்பு வாய்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
பிரபல நட்சத்திரங்கள் பில பேர் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அவர்களது பக்கங்களை வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
இருந்தாலும், அவர்களைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தொட்டு விடுகிறது.
அதிகாரப்பூர்வமான பக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள பக்கங்களும் லட்சக்கணக்கில் தொடரும் ரசிகர்களை வைத்திருக்கத்தான் செய்கிறார்கள்.
நடிகை இனியாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் சேர்ந்திருக்கிறார்களாம். இது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ள இனியா ஒரு வீடியோவையே வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…
Comments
Post a Comment