23rd of October 2013
சென்னை::5. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
நான்காவது வார இறுதியில் 48 திரையிடல்களில் 7.9 லட்சங்களை மிஷ்கின் படம் வசூலித்துள்ளது. வார நாட்களில் 84 திரையிடல்களில் 8.07 லட்சங்கள். இதுவரை சென்னையில் 84 லட்சங்களை வசூலித்துள்ளது.
4. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
விஜய் சேதுபதியின் படம் சென்ற வார இறுதியில் 15.3 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாட்களில் வசூல் 27.2 லட்சங்கள். இதுவரை சென்னையில் 3.8 கோடிகளை வசலித்து சுமாரான வெற்றியை பதிவு செய்துள்ளது.
3. நய்யாண்டி.
இரண்டாவது வார இறுதியில் 49.7 லட்சங்களையும், வார நாட்களில் 84.5 லட்சங்களையும் வசலித்துள்ளது. முதல் பத்துதின வசூல் 2.4 கோடிகள்.
2. ராஜா ராணி.
நான்காவது வார இறுதியில் 56.4 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. வார நாட்களில் வசூல் 62.8 லட்சங்கள். இதுவரை 10.11 கோடிகளை வசூலித்துள்ளது. வேலாயுதம், நண்பன், தசவதாரம், பில்லா 2, மங்காத்தா, சிறுத்தை, 7 ஆம் அறிவு உள்ளிட்ட படங்களின் வசலை ராஜா ராணி தாண்டியுள்ளது.
1. வணக்கம் சென்னை.
கிருத்திகா உதயநிதியின் அறிமுகப் படமான இது வார இறுதியில் 75.8 லட்சங்களையும், வார நாட்களில் 1.10 கோடியையும் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 2.7 கோடிகள்.
Comments
Post a Comment