பாலிவுட் வாய்ப்பு பறிகொடுக்கிறார் அமலா பால்?!!!

20th of October 2013
சென்னை::அமலா பாலுக்கு இந்தியில் நடிக்க வந்த வாய்ப்பு கைநழுவிப்போகும் சூழல் உள்ளது. விஜய்யுடன் நடித்த தலைவா படத்தையடுத்து தமிழில் டாப் ஹீரோக்களுடன் நிறைய படங்கள் வரும் என்று எதிர்பார்த்தார் அமலா பால். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் தமிழில் வெளியான ரமணா படம் இந்தியில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க ரீமேக் ஆகிறது. அதில் ஹீரோயினாக நடிக்க அமலாவுக்கு வாய்ப்பு வந்தது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மும்பை சென்றார். ஆனால் அவர்கள் கேட்கும் நேரத்தில் கால்ஷீட் ஒதுக்கி தர முடியாத நிலையில் அமலா இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலிவுட் படம் அவர் கையைவிட்டு நழுவும் சூழல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹீரோ நிவின் ஜோடியாக மலையாள படமொன்றில் நடிக்க அமலா ஒப்புக்கொண்டாக தகவல் வெளியானது.

இது பற்றி அமலா பால் தனது இணையதள பக்கத்தில் கூறும்போது, எனது அடுத்த படம் பற்றி உறுதி இல்லாத தகவல்கள் வெளிவருகின்றன. எனது புதிய படம் பற்றி வரும் தகவல்கள், உலக கோப்பை கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணி கோப்பையை வென்றது என்பதுபோல் உள்ளது. இன்னும் சில நாட்களில் அடுத்த படம் பற்றி முறைப்படி தெரிவிப்பேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

Comments