24th of October 2013
சென்னை::ஆரம்பம் படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, சந்தானம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு ஆரம்பம் வரும் 31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆரம்பம் படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்கள்.
மங்காத்தா படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயர் விநாயக் மகாதேவ். தற்போது அவர் நடித்துள்ள ஆரம்பம் படத்தில் அவரது பெயர் அசோக்.
மேலும் ஆரம்பம் படத்தின் கதை அஜீத்துக்காக எழுதப்படவில்லையாம். சொல்லப்போனால் கதையில் அவரும் ஒரு கதாபாத்திரம், அவ்வளவு தான் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் அஜீத்தின் மாஸ் இமேஜுக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லையாம்.
Comments
Post a Comment