அரசின் புகையிலை எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடித்து வசனம் பேசிய காமெடி நடிகர் சந்தானத்துக்கு எதிர்ப்பு!!!
21st of October 2013
சென்னை::அரசின் புகையிலை எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடித்து வசனம் பேசிய காமெடி நடிகர் சந்தானத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.
பொது மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்தையும் குட்கா, பான்மசாலா பயன்படுத்துவதையும் கைவிடுவதற்காக திரைப்படங்களில் அரசு, முகேஷ் என்பவர் குட்கா பயன்படுத்தி இறந்ததை விளம்பர படமாக வெளியிட்டு வருகிறது. இதை ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் சந்தானம் கிண்டலடித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசானது. அதில் இக்காட்சி உள்ளது. தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு இயக்கத்தின் அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் அரசு சுகாதார துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள புகாரில் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ பட டிரெஸ்டரில் தம்மடிக்க வேண்டும் என கார்த்தி கேட்க அதற்கு சந்தானம் குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷின் குரலை இமிடேட் பண்ணி பேசிக் காட்டுவார்.
புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு எதிரான விளம்பரத்தை சந்தானம் கிண்டலடித்துள்ளார். குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷ் நிஜமாகவே புகையிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர். புகையிலை மற்றும் புகைப்பழக்கத்தை விடுவது கேவலமான செயல் என்பதுபோல் சந்தானத்தின் கிண்டல் அமைந்துள்ளது. இது புகையிலை கட்டுப்பாடு சட்ட பிரிவு 5–க்கு எதிரானது என்று கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது. சர்ச்சைகுரிய காட்சியை நீக்குவது குறித்து பரிசீலனை நடப்பதாக தெரிகிறது.
Comments
Post a Comment