2nd of October 2013
சென்னை::ஷகிலாவை ஒட்டுமொத்த கேரள படவுலகமும் சேர்ந்து நாடு கடத்திவிட்டது. அவருக்கு அதே டைப் படங்களில் நடிப்பது ஆத்திரமூட்டியதால், சரி போகட்டும் போ என்கிற முடிவோடு தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துவிட்டார்.
வந்தவரை வளர்த்து ஆளாக்குவதுதானே கலையுலகத்தின் கடமை? ஆனால் அதை செய்யவேயில்லை இவர்கள். நிஜமாகவே இளைத்துப் போனார் ஷகிலா. டயட்ல இருக்கேன் என்று ஒற்றை வரியில் இதற்கு காரணம் சொன்னாலும் அவரது கவலையே அவரை இளைக்க வைத்துவிட்டதாக கருதினார்கள் இங்கேயிருக்கும் அவரது ஆதரவாளர்கள் சிலர். இவர்களின் அட்வைஸ்படி, பல இயக்குனர்களையும் தொடர்பு கொண்ட ஷகிலா, எனக்கு வாய்ப்பு கொடுங்க என்றே கேட்கவும் ஆரம்பித்துவிட்டாராம்.
அதுமட்டுமல்ல, என்னை கவர்ச்சியாகவே பார்த்து பழகிட்டாங்க. அந்த இமேஜுலேர்ந்து வெளியில் வரணும்னு ஆசைப்படுறேன். நல்ல கேரக்டர் ரோல் இருந்தா கொடுங்களேன் என்கிறாராம். இதன் விளைவாக சில படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகிலா. இருந்தாலும் பரஞ்சோதி என்ற படத்தில் இவருக்கு கஞ்சா கருப்பு சைக்கிள் பழக கற்றுக் கொடுப்பது போல ஒரு காட்சியை எடுத்திருக்கிறார்கள். ஷகிலா இமேஜை துளியும் மாற்றுவதாக இல்லையாம் அது
Comments
Post a Comment