டைரக்‌ஷன் பண்ற ஆசையே இல்ல…’ : ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி முடிவு!!!

24th of October 2013
சென்னை::திரைக்கதை எழுதும் ஆசைஇருந்தாலும், அதே நேரத்தில் படம் டைரக்ட் செய்யும் ஆசை சுத்தமாக இல்லை” என்று தெரிவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
 
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்போது இசை தவிர்த்து சினிமாவின் மற்ற துறைகளிலும் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இசையமைப்பது தவிர படங்களுக்கு திரைக்கதை எழுதுவது, தயாரிப்பது என்று தனக்குப் பிடித்தமான மற்ற சினிமா விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
 
அதிலும் அவர் திரைக்கதை எழுதுகிறார் என்றதும் அப்போ கண்டிப்பா படம் டைரக்ட் செய்வார் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனக்கு டைரக்ட் செய்யும் ஆசையே இல்லை என்று மறுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
 
இசை நிகழ்ச்சிகளுக்கும், கம்போசிங் செய்வதற்கும் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது அங்குள்ள நிறைய விஷயங்களைக் கவனித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த விஷயங்களை எழுதி வைத்திருக்கிறேன். இதுதான் எனக்கு எழுதும் ஆற்றலைத் தந்தது.
 
எனது நண்பர் கேப்ரியல் என்பவர் அதற்கு ஊக்கம் அளித்ததுடன் திரைக்கதை எப்படி எழுத வேண்டும் என்றும் கற்றுத்தந்தார். கடந்த 3  வருடங்களாக ஆண்டுகளாக நான் திரைக்கதை எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த விஷயம் சிலபேருக்குத் தான் தெரியும்.
 
தற்போது நான் ஒரு ஹிந்திப் படத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறேன். திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் இருந்தாலும் படம் டைரக்‌ஷன் செய்யும் ஆசை மட்டும் எனக்கு இல்லவே இல்லை” என்று திட்டவட்டமாக மறுக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
 
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்ஸ்….

Comments