நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல்: வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!!!

3rd of October 2013
சென்னை::நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்களும் வீசி தாக்குதல் நடந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவர் பட்டினபாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, உரிய போலீஸ் பாதுகாப்பும், எனது வீட்டுக்கு வழங்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் முதலில், போனில் பேசி திட்டினார். அவரைத் தொடர்ந்துதான், பெண்கள் பலர் போனில் பேசி, மிரட்டினார்கள், என்று எஸ்.வி.சேகர், நிருபர்களிடம் பேசும் போது கூறினார்.

இது தொடர்பாக துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், பட்டினபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அவரது வீடு உள்ள பகுதியில் போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
tamil matrimony_INNER_468x60.gif

Comments