தருண் கோபிக்கு ஜோடியாக காதல் பட சந்தியா ஒப்பந்தம்!!!


1st of October 2013
சென்னை::தருண் கோபிக்கு ஜோடியாக காதல் பட சந்தியா ஒப்பந்தம் செய்யப்ட்டுள்ளார்.
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருண்
 
கோபி இயக்கி, நடிக்கும் படம் சூதாட்டம்’. இதில் தருண் கோபிக்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் ரமணா, சரோஜா, காதல் சுகுமார், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
 
படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். தேவராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
 
இப்படத்தின் துவக்கவிழா நேற்று சாலிகிராமத்தில் நடந்தது. துவக்க விழாவில், தருண்கோபி, ‘காதல்’ சந்தியா, ரமணா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நட்பை முன்னிலைப்படுத்தி படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தருண் கோபி தெரிவித்துள்ளார்.

Comments