ரஜினி அட்வைஸ்படி நடிக்கிறேன் - விக்ரம் பிரபு!!!

6th of October 2013
சென்னை::ரஜினி சொன்ன அறிவுரையைக் கேட்டு, அதன்படி படங்களை ஒப்புக் கொள்கிறேன் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறினார். நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் பிரபு சாலமன். கும்கி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். 

இந்தப் படம் பெற்ற வெற்றியால், முன்னணி இளம் நாயகனாக வலம் வருகிறார். இப்போது இவன் வேறு மாதிரி, சிகரம் தொடு உள்பட 3 படங்கலில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "ஒரே நேரத்துல நாலைந்து படங்களில் நடிப்பது என் தாத்தா, அப்பா காலத்துல சகஜம், சுலபம். 

இன்னைக்கு நிச்சயம் கஷ்டம். ஆனா, 'ஒரே நேரத்துல ஒரு படம் மட்டும் பண்ணாதே... ரெண்டு, மூணு படங்கள்ல நடி. அப்பத்தான் நல்ல அனுபவம் கிடைக்கும்'னு ரஜினி சார் சொன்ன அறிவுரையை ஏற்று நான் அப்படி நடிக்க ஒப்புக்கிறேன்," என்றார்.

Comments