30th of October 2013
சென்னை::துள்ளுவதோ இளமை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தனுஷ்.
தொடர்ந்து காதல் கொண்டேன, திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமின்றி இந்தி திரையுலகிலும் முத்திரை பதித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்சனா படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ், இந்தியில் முத்திரை பதித்த தனுஷுக்கு ஹாலிவுட்டில் இருந்தும் நடிக்க வாய்ப்புகள் வந்ததாம்.
ஆனால், அந்த நேரத்தில் இங்கு பல படங்களில் பிஸியாக இருந்ததால் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்கிறார் தனுஷ். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பாலிவுட்டில் அறிமுகமாகிய நேரத்தில் என்னைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். இந்நிலையில் ஹாலிவுட்டில் நடிக்கப் போகிறேன் என்றால் மேலும் சிரிப்பார்கள். எனக்கே சிரிப்புதான் வருகிறது. ஆனால், எதுவுமே சாத்தியம்தான் எனக்கு. முடியாதது எதுவும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது தனுஷ் தமிழில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘அனேகன்’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவைதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment