ஜிலு ஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே’:காத்ரீன் தெரசா!!!

30th of October 2013
சென்னை::அனுஷ்கா நடித்து வரும் ‘ராணி ருத்ரம்மாதேவி’ படத்தில், வாள் சண்டை, கத்தி சண்டை மட்டுமின்றி நடனப் போட்டியும் உள்ளதாம். இந்தப் போட்டியில் அனுஷ்காவுடன் போட்டி நடனமாடக்கூடிய நடிகையை, சில மாதங்களாக தேடி வந்தவர்கள் இப்போது காத்ரீன் தெரசா என்ற மலையாள நடிகையை புக் செய்துள்ளனர்.
 
இந்த காத்ரீ்ன்  தெரசா மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் பிசியான நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழில், மேலும் ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடனத்தில் கை தேர்ந்த நடிகையான இவரும்,  அனுஷ்காவும் ஆடும் போட்டி நடனக்காட்சி, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் பத்மினியும், வைஜெயந்தி மாலாவும் போட்டி போட்டு ஆடும், ‘ஜிலு ஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே’ என்ற பாடல் காட்சியை போலவே படமாக்கப்பட உள்ளதாம்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments