30th of October 2013
சென்னை::ஜெயம்’ ரவி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘பூலோகம்’ படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்தில் இவர் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இதற்காக ஜிம்மிற்கு சென்று தனது உடல் எடையை கொஞ்சம் அதிகரித்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி, இப்படங்களுக்கு பிறகு தனது அண்ணன் ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இப்படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை மீண்டும் குறைக்கப் போகிறாராம்.
ரொமான்டிக் ஹீரோவாக ஸ்லிம்மாக இருக்கவேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜா. இதற்காக ஜிம்மே கதியென்று கிடக்கிறாராம் ஜெயம் ரவி.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
Comments
Post a Comment