15th of October 2013
சென்னை::ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் தான் இல்லை என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
அஜித், ஆர்யா, நயன்தாரா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம்தான் ஆரம்பம். அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் இது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. ஆனால் படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், ஆரம்பம்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், கடந்த 2005ம் ஆண்டு ஏ.எம்.ரத்னம் தயாரித்த ‘கேடி’ என்ற படத்திற்கு 1 கோடியே 50 லட்சம் பைனான்ஸ் செய்ததாகவும், அதை அவர் திரும்பத்தராமல் ஏமாற்றி வருவதாகவும் இதனால் ரத்தினம் தயாரித்திருக்கும் ஆரம்பம் படத்தை வெளியிடக் கூடாது என குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்னத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனால் ஏ.எம்.ரத்தினத்திற்கு கோர்ட் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ரத்தினம் ஆரம்பம் படத்திற்கு நான் தயாரிப்பாளர் இல்லை, ஸ்ரீ சத்யா சாய் மூவிஸ் நிறுவனத்தின் ஏ.ரகுராம் என்பவர்தான் படத்தை தயாரித்துள்ளார் என கூறியுள்ளார்.
Comments
Post a Comment