தனிமை தீவில் ரஜினியுடன் டேட்டிங் மல்லிகா ஷெராவத் ஆசை!!!

17th of October 2013
சென்னை::தனிமை தீவில் ரஜினியுடன் டேட்டிங் செல்ல ஆசை வெளியிட்டிருக்கிறார் மல்லிகா ஷெராவத்.தமிழில் ‘தசாவதாரம்‘ படத்தில் நடித்த பாலிவுட் கிளாமர் குயின் மல்லிகா ஷெராவத் ‘ஒஸ்தி‘ படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் ஆடினார்.  அடிக்கடி தனது வித்தியாசமான செயல்களால் பரபரப்பை ஏற்படுத்தும் இவர் அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ மூலம் தனது காதலனை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் இளைஞர்கள் மல்லிகாவிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். யார் மனதை கவர்கிறாரோ அவரை காதலனாக மல்லிகா ஏற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை 15 பேர் பங்கேற்று மல்லிகாவுக்கு காதல் வலை விரித்தனர். ஒரு சிலர் வர்ணித்து பேசிய காதல் வசனங்களை கேட்டு மல்லிகா அவர்களுக்கு முத்தம் பரிசளித்தார். ஜஷன் சிங் என்ற இளைஞர் சினிமா ஹீரோக்கள் பாணியில் மண்டியிட்டு மல்லிகாவுக்கு காதலை தெரிவித்தார். இது அவரை கவர்ந்திழுத்தது. அவரை தனது காதலனாக மல்லிகா தேர்வு செய்தார். காதலனை தேர்வு செய்த கையோடு மல்லிகாவிடம் ஒரு நிருபர், ‘யாருடன் டேட்டிங் செல்ல ஆசை? என்றபோது ‘ரஜினியுடன் தனிமை தீவில் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்‘ என்று பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Comments