31st of October 2013
சென்னை::வேட்டை மன்னன் படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். முதலில் ஆரம்பித்த இந்தப் படத்திற்கு நடுவில்தான் போடா போடி படத்தின் ஷூட்டிங் நடந்து படம் வெளியானது (போடா போடி வேட்டை மன்னனுக்கெல்லாம் பல காலம் முன்பு தொடங்கப்பட்டது)
போடா போடி முடிவதற்குள் வாலு படத்தை தொடங்கினார் சிம்பு. வேட்டை மன்னன் முன்னகராமல் அப்படியே தங்கிப் போனது. இப்படியேப் போனால் அறுபதாம் கல்யாணத்துக்குதான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும் என்பதை புரிந்த இயக்குனர் நெல்சன் வேட்டை மன்னனை ஒதுக்கி வைத்து அடுத்தப்பட வேலையில் இறங்கியுள்ளார்.
ஹாரர் படமான அதன் லொகேஷன் தேடும் பணி தற்போது நடந்து வருகிறது. ஆச்சரியம் என்னவென்றால் வேட்டை மன்னனை தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியே இந்த ஹாரர் படத்தையும் தயாரிக்க உள்ளார்.
வேட்டை மன்னனில் இயக்குனர் பட்ட அவஸ்தையை படமாக எடுத்தால் மிகக் கொடூரமான ஹாரர் படம் கிடைக்குமே....?
Comments
Post a Comment