12th of October 2013
சென்னை::கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ள ராஜேஷ், இயக்கியிருக்கும் இப்படத்தில் சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கார்த்தி, ராதிகா ஆப்தே, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் டி.ஞானவேல்ராஜா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் 80களில் நடப்பது போன்ற சில காட்சிகள் இடம்பெறுகின்றன. அதற்காக, கார்த்தி, நடிகர் பிரபுவைப் போல கெட்டப் மாற்றிக்கொண்டு அவரைப் போலவே நடித்துள்ளாராம். நடிப்பு மட்டும் இன்றி ஒரு பாடல் முழுவதும் பிரபு போலவே நடனமும் ஆடியுள்ளார்.
இது குறித்து பேசிய கார்த்தி, "பிரபு சார் போல நடிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னவுடன் முதலில், சாதரணமாக ஒகே சொல்லிவிட்டேன். ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் போது தான் எனக்கே ஒரு வித பயம் ஏற்பட்டது. பிறகு வேண்டாம் என்று சொன்னால், இயக்குநர் விடவில்லை. பிறகு பல நாட்கள் இதற்காக பயிற்சி எடுத்து பிரபு சார் போல நடித்து, ஒரு பாடலில் நடனமும் ஆடியுள்ளேன்." என்றார்.

Comments
Post a Comment